Sunday, June 6, 2010

மாதங்கள் பத்து!

(6 வருசத்துக்கு முன்னாடி)
டேய் சாப்டுட்டு போய் படிறா!


 -_-\__#


(நாலு வருசத்துக்கு முன்னாடி)
இன்னும் பசிக்கலியா! மணிய பாரு 3 ஆயிட்டு!
நான்: என்ன குழம்பு?
கோழிக்கறி குழம்பு!

நான்: எனக்கு தயிர்சாதமும் மாங்கா ஊறுகாயும் போதும்!
ஏன்டா கறிக்குழம்பு இருக்கும் போது தயிர் போதுங்கிற? சரி ஏதோ ஒன்னு சாப்ட்டா சரி!


 -_-\__#


(2 வருசத்துக்கு முன்னாடி)
இந்தா டீ வச்சு ரொம்ப நேரம் ஆயிட்டு! குடிச்சுட்டு பழையபடி தூங்கு!! கொஞ்சம் சூடு பண்ணி தரவா?

நான்:இல்ல வேணாம்! இதுவே போதும்!! (கழனித் தண்ணி மாதிரி ஒரே மடக்கில் ஒரு டம்ளர் டீய காலி பண்ணிடுறது :P ).


 -_-\__#


(போன வருசம்... அமெரிக்கால இருந்து வந்து, பின் ஏ.சி. பெட்டியில ஊருக்கு திரும்பும் போது)
 என்ன சாப்பாடுடா பண்ண?
நான்: மூணு மாசமா பழைய சோறு சாப்பிடல! அதனால பழைய சோறும் கருவாட வெங்காயம் நல்லா போட்டு பொரிச்சு வைங்க!

-_-\__#

(சில நிமிடங்களுக்கு முன்னர்)
நேரத்துக்கு சாப்பிடு!
நான்: ம்
நல்லா காய்கறி, பழம் எல்லாம் நிறைய சேத்துக்கோ!
நான்: ம்ம்.
பாலு, முட்டை எல்லாம் வாங்கு!!!
நான்: ம்ம்.
என்னமோடா! ஒழுங்கா சாப்பிட்டு ஒழுங்கா உடம்ப பாத்துக்கோ!
நான்: ம்ம்.
லொக்கு! லொக்கு!! லொக்கு!!!
நான்: என்ன இருமுறீங்க? மாத்திரைய  ஒழுங்கா எடுத்துக்கோங்க! ரெகுலரா செக்கப் போங்க!!
நான்:  ;-(
நான்: சரி போன வைக்கிறேன்!

                       @___/-_-\     /-_-\____#
                           x    x                            x     x