Tuesday, December 2, 2008

அடடே! - புத்தக விமர்சனம்

~~~~ அடடே! ~~~~



பேர் போலவே புத்தகமும் ஒவ்வொரு கார்ட்டூனும் அடடே போட வச்சிட்டு.
ஒவ்வொரு கார்ட்டூனும் ஒரு குட்டி கதை சொல்லுது. மேலோட்டமாக பார்த்தால் அன்றாடம் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இது தெரியும்.


ஆனா பல கார்ட்டூன்கள் காலத்துக்கும் பொருந்தும் திருக்குறளாய் இருக்கிறது.
உதாரணத்துக்கு ஒன்று,

சரி காஸ் விலையை ஏற்றவில்லை,
பழைய விலைக்கே தருகிறோம்!
ஆனால் இந்த சைஸ்தான் இருக்கும் பரவாயில்லையா?
(என்று பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் சொல்லுவதாக கார்ட்டூன் உள்ளது.)

இன்னும் சில ‘நச்’ வகை கார்ட்டூன்கள். உதாரணமாக,

"முந்தாநேத்து ரேஷன் அரிசி விலை உயர்வு!
நேத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
இன்று மின் கட்டணம் உயர்வு!
இன்னும் உயராதது நம் வாழ்க்கைத்தரம் மட்டும்தான்!
(என்று ஒரு குடும்பத்தலைவர் தினப் பத்திரிக்கை படித்துவிட்டு குடும்பத்தலைவியிடம் சொல்வதாக கார்ட்டூன் உள்ளது.)

இது தவிர நடு நிலையுடன்அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் சாடியுள்ளார்.
இவைகளை, அழகாக வகைப்படுத்தி வைத்துள்ளது படிக்க மிக எளிதாக உள்ளது.

புத்தக ஆசிரியர் ‘மதி’ கடந்த 11 ஆண்டுகளாக தின மணியில் கார்ட்டூனிஸ்டாக இருக்கிறார். மேலும் 3000க்கும் மேற்பட்ட கார்ட்டூன்களை தினமணியில் வரைந்துள்ளது ஆச்சரியப்படத்தக்க விஷயம். இவர் நம்ம பக்கத்து ஊர்காரர்(திருநெல்வேலி) என்பதை நினைக்கும் போது இன்னும் பெருமையாக இருக்கிறது.

இவர் 2002 மற்றும் 2005ல் இதே போன்று கார்ட்டூன் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இது தவிர மேலும் ஆறு தொகுப்புகள் அடடே-1’ முதல் 'அடடே-6’ வரை வெளியிட்டுளளார்.

இவருடைய திறமைகள் வெளி வர காரணமாயிருந்த ‘ஆனந்த விகடனுக்கும்’, ஆர்.கே.லக்‌ஷ்மணன் மாதிரி ஒரு சாதனையாளராக வாய்ப்பு கொடுத்த ‘தினமணி’க்கும், கிழக்கு பதிப்பகத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.


உங்களுக்கும் இந்த புத்தகம் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன்.
இந்த புத்தகம் பற்றியும் இதன் ஆசிரியர் பற்றியும் மேலும் அறிய அடடே! -1


இன்றைய அடடே!

சரி, இப்போ நாம இந்த புத்தகத்தின் சில பல நிறை குறைகளை இங்கு சொல்லி விடுகிறேன்.

~~~~முதலில் நிறைகள்~~~~

#1. மிக அருமையான கார்ட்டூன்கள் :-)
ஒரு கார்ட்டூனோ அல்லது ஓவியமோ வரைய எவ்வளவு மெனக்கிட வேண்டுமென்று என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஆம் நான் கொஞ்சம் சுமாராக வரைவேன். அதுக்கப்புறம் பொறியியல் கல்வி அது இதுன்னு என்னுடைய அந்த திறமையை வளர்க்காமலேயே போயிட்டேன். [;(]

#2. காலத்திற்கும் பொருந்துமாறு அநேக கார்ட்டூன்கள். :-)
’நீ எப்படியும் கார்ட்டூன் போட்டுட்டு போ; நாங்க அப்படித்தான் மாறமாட்டோம்’ என்று கொஞ்சமும் மாறாத அரசியல் வாதிகளும் அவர்களுக்கு வாக்குச் சீட்டிலும் குத்தி பின்னர் முதுகிலும் குத்து வாங்கும் வெகுஜனமும் இருக்கும் வரை பல கார்ட்டூன்கள் காலத்துக்கும் பொருந்தும்.


#3. மிக நேர்த்தியாக வரிசையாக, பொருத்தமான தலைப்புகளில் கார்ட்டூன்களைத் தேர்ந்தெடுத்து உள்ளமை.

#4. வெறுமனே ரசிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைப்பது.


~~~~இப்பொழுது குறைகள்~~~~

#1. என் வீட்டாரிடம் கொடுத்து படிக்கச் சொல்லி அவர்கள் கருத்தையும் கேட்டபோது, என் தந்தையின் முதல் கருத்தானது, எல்லாம் அன்றன்றைக்கு படிச்சா நல்லா இருக்கும். சரி பாதி கார்ட்டூன்கள் காலாவதியாகி விட்டது என்று சடேரென்று சொன்னார்.

ஹ்ம்ம், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அப்படி கூடத் தோன்றலாம்; ஆனா இது போன்ற ஒரு தொகுப்பை படிக்கும் போதுதான், நம்மை பற்றி நாமே அறிய முடிகிறது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னாடி வரைந்த கார்ட்டூன்கள் இன்றைக்கும் நம் அரசியல்வாதிகளுக்கும் பொது மக்களாகிய நமக்கும் எந்த அளவுக்கு பொருந்தி வருகிறது என்று எண்ணி பார்க்கும் போது கொஞ்சம் வெட்ககேடாகத்தான் இருக்கிறது...

#2. இதனை கையடக்க அளவில் வெளியிட்டால் இதே புத்தகத்தை, இதே பக்க அளவில், சரி பாதி விலையில் விற்க முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். பார்ப்போம், நம்முடைய இந்த வேண்டுகோளுக்கு நடைமுறைச் சாத்தியம் இருக்கிறதா என்று புத்தக வெளியீட்டாளர்கள் சிந்திப்பார்கள் என்று நினைக்கிறேன்.


~~~~பொதுவாக ~~~~

நம் வீட்டு நூலகத்தை சிறப்பிக்க ஏற்ற புத்தகம்.
நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, நம் அலுவலக உயரதிகாரிகளுக்கோ வாங்கி பரிசளிக்கவும் சிறந்த புத்தகம்.

Reference:


1. அடடே! - by மதி.

2. http://nhm.in/our_books/Kizhakku/crt/1

3. http://nhm.in/printedbook/590/Adade%20-%201

4. http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNR20081121142115&Title=Cartoon+Page&lTitle=L%F4oh%E5u&Topic=0&ndate=12/2/2008&dName=No+Title&Dist=


என்னைப் பற்றி:



என் பெயர் ரமேஷ்.
நான் ஒரு கணிப்பொறி மென்பொருள் பொறியாளர், மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

என் விமர்சனத்தைப் படித்து, இந்த புத்தகத்தை வாங்கிப் படித்து உங்கள் கருத்துகளையும், புத்தகம் பற்றிய உங்கள் விமர்சனத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளவும் வரவேற்கிறேன்.

No comments: