Wednesday, March 24, 2010

Indian Lunch - Thru Door Delivery @ Austin





மதியம் 1.30 க்கு மண்டையில மணி அடிச்சது. அடடா, சாப்பாட்டு நேரம் ஆயிட்டே, எத்தனை நாளைக்குதான் இப்படி அரண்மனைக் கைதி மாதிரி ஊர் பேர் தெரியாத சாப்பாட சாப்பிடுறது... சரின்னு ஒரு வேகத்துல கூகுள்ல ‘Indian Lunch Door Delivery' அப்படினு போட்டு தேடினா, அட ஆண்டவா, சென்னை அட்ரஸ் ஒண்ண கொடுத்தது. என்ன கொடுமை ரமேஷ் இதுனுட்டு, கூகுள் மேப்ல ‘Indian Restaurant' அப்படினு ஆஸ்டினுக்கு பக்கத்துல இருக்குற இடமா பார்த்து தேடுனா, நம்ம ‘பாம்பே பிஸ்ட்ரோ’ கண்ல பட்டது. சரினு அவங்க நம்பருக்கு டயல் பண்ண ஒரு லேடி எடுத்தாங்க. ‘சாரி டோர் டெலிவரி கிடையாது, ஆனா நாங்க டோர் டெலிவரிய அவுட்சோர்ஸ் செய்திருக்கோம், நீங்க அவங்கள கேளுங்க, அவங்க நம்பர் சொல்றேனு, (512) 346-9990 அப்படினு’ சொன்னாங்க...

அடுத்ததா அந்த கேட்டரிங் டோர் டெலிவரிக்கு தொலைபேசினேன்.. அங்கயும் ஒரு லேடி போன எடுத்து ‘ என்ன நாட்டு உணவு வேணும், என்ன ஹோட்டல் உணவு வேணும், எங்க இருக்கீங்க, என்னா ஏதுனு விசாரிச்சுட்டு, உங்க பேர சொல்லுங்கனு சொன்னாங்க.’ நான் உடனே, R for Rome, A for Austin, M for Minnesota, E for Elegant, S for Sweden and H for ( Hitler அப்படினு சொல்ல தோணுச்சு, திடீர்னு சாப்பாடுக்கு ஆப்பு ஆயிடுமோனுட்டு ) ஹ்ம்ம்ம், H for H.. ' அப்படினு திணறி முடிச்சேன்... அந்த பொண்ணு ‘Got it' அப்படினு சொல்லி சிரிச்சுட்டு..

சரி ஒரு நிமிசம் பொறுங்கன்னு சொல்லிட்டு போனாங்க.. ( ஹோட்டல்ல கேட்டு இந்த பயலுக இங்கதான் தங்கியிருக்காங்களானு கேட்டு நிச்சயப்படுத்தியிருப்பாங்க... வேற எதுவா இருக்கும்...) , பின் வந்து ‘நீங்க ரெடி கேசா இல்லா கார்டா?’னு கேட்டாங்க.. என்ன சொல்ல, சரின்னுட்டு, ‘டெபிட் கார்டுனு சொல்லிட்டு, கார்டு நம்பர், காலாவதி தேதி, கார்டில் உள்ள பெயர் எல்லாம் சொல்லியாச்சு.

“இன்னும் ஒரு மணி நேரத்தில சாப்பாட டெலிவரி பண்ணிடுவோம் உங்க ரூமுக்கே” அப்படினு சொன்னாங்க.. எனக்கு கொஞ்சம் உறுத்தலா இருந்தது.. ஒட்டு மொத்தமா எவ்வளவு  பில் வரும் அப்படினு கேட்டதுக்கு, “2 லஞ்ச், 2 சிக்கன் கறி குழம்பு, நான்( நானல்ல) .. டோர் டெலிவரி” எல்லாம் சேர்த்து $34.70 ஆகும்னு சொல்லி வச்சாங்க.. நான் குஷ்யாகி, அப்படியே ஆகட்டும்’னு சொல்லி போன கட் பண்ணிட்டேன்...


அட பாவி என்னத்த கூட்டி கழிச்சாலும், இங்க இத( கட்டுரையின் முதல் 3 வரிய திரும்ப வாசியுங்கள்) சாப்பிட்டா வர்ற காச விட $10 கம்மியாதான் வருதுனு சொல்லிக்கிட்டேன்..


மக்களே, பார்த்துக்கோங்க... இந்த மாதிரி வசதி சென்னைலயும் இருக்கு..
ஆனா தூத்துக்குடி மாதிரி சின்ன ஊர்லயும் இருந்தா நல்லா இருக்கும்... INR.25 சாப்பாடு INR.5 டோர் டெலிவரினா கும்பிட்டுட்டு கொடுக்க நம்மில பல பேரு ரெடியா இருக்கோம்.. முக்கியமா நம்ம பெண்குலம் இத ஆமோதித்து வரவேற்கும்... :D

சாப்பாடு ஆர்டர் பண்ணி வெயிட் பண்ற நேரத்துல எழுதினது.. என் அயல் நாட்டு( இந்தியா) ரசிக ரசிகைகளுக்கு, இன்றைய ‘மதிய இரவுக்கான அமெரிக்கா உணவு மெனு பதிவு’ இன்னைக்கு இருக்காதுனு பெருமையோட சொல்லிக்கிறேன்.. வரட்டடடா!!!

- R@ME$H

2 comments:

Arul said...

Eppadinne ippadi ellam kalakkuringnne.....

சுரபி said...

இந்தியா அயல்நாடா??
இந்த அநியாத்த தட்டிகேட்க யாருமே இல்லையா??
இன்டெல் காசு இப்படி சாப்பிட்டே அழிச்சுடுவீங்க போல.. :ப
என்ஜாய்..